கத்தாரின் தோஹாவில் நவம்பர் 14-ஆம் தேதி தொடங்கவிருக்கும் 'ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை' கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய 'ஏ' அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜிதேஷ் ஷர்மா கேப்டனாகவும், ஆல்-ரவுண்டர் நமன் தீர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் தொடர்களில் அசத்திய பிரியான்ஷ் ஆர்யா, ரமந்தீப் சிங் போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பாக, 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி அணியில் இருப்பது கவனத்தை ஈர்க்கிறது.
இந்தத் தொடருக்கான வயது வரம்பு 23-லிருந்து மாற்றப்பட்டு, அணியில் உள்ள எட்டு வீரர்கள் 25 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இந்தியா 'ஏ' அணி, குரூப் 'பி' பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் 'ஏ' மற்றும் ஓமன் ஆகியவற்றுடன் மோதுகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.