முழுநேர அரசியல்வாதியாகியுள்ள விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படம்தான் தனது கடைசிப் படம் என அறிவித்துள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் வியாபாரங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமையை தயாரிப்பாளர் ராகுல் கைப்பற்றியதாக சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்போது தமிழக விநியோக உரிமை இன்னும் முடியாத நிலையில் அதைக் கைப்பற்ற பிரபல தயாரிப்பாளர் ராக்போர்ட் முருகானந்தம் முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது