Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனநாயகன் தமிழக விநியோக உரிமை வியாபாரத்தில் எழுந்த சிக்கல்…!

Advertiesment
விஜய்

vinoth

, வியாழன், 13 நவம்பர் 2025 (09:56 IST)
முழுநேர அரசியல்வாதியாகியுள்ள விஜய் தற்போது ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படம்தான் தனது கடைசிப் படம் என அறிவித்துள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் பெரும்பாலானக் காட்சிகள் சென்னை பனையூரில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சுமார் 115 கோடி ரூபாய்க் கொடுத்து வாங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் சொன்ன தேதியில் அதற்கான முன்பணத்தைக் கொடுக்கத் தவறிவிட்டதால் இப்போது அந்த ஒப்பந்தம் முறிவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழக விநியோக உரிமைக்காகப் புதிய விநியோகஸ்தரை KVN நிறுவனம் தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா லிங்குசாமி?