விஜயின் பாடலைப் பொருத்தவரைக்கும் அவருடைய ரசிகர்கள் விரும்புவது முதல் ஃபிரேமிலிருந்து விஜயை பார்க்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் தளபதி கச்சேரி பாடலை பொருத்தவரைக்கும் எடுத்தவுடனே அனிருத்தை காட்டியிருக்கிறார்கள். ஒரு பல்லவி முடிந்த பிறகுதான் விஜயையே காண்பித்து இருக்கிறார்கள்.
பாடலின் நீளமோ மிகக் குறைவு தான். இன்னொரு பக்கம் அரசியல் ரீதியாக விஜயை ஒழிக்க வேண்டும் என சிலபேர் இறங்கி ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிளை பதம் பார்த்து விட்டார்களா என்று தெரியவில்லை. அதற்கு உதாரணமாக கரூர் சம்பவத்திற்கு முன்புவரைக்கும் விஜய்க்கு ஆதரவாக பேசிய வீடியோக்கள் வேகமாக போய்க்கொண்டிருந்தது.
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயைப் பற்றி பாசிட்டிவாக பேசினாலும் போகவில்லை. நெகட்டிவாக பேசினாலும் அந்த வீடியோ வேகமாக போகவில்லை. அப்போ இதுக்கு என்ன காரணம் என்று விசாரிக்கும் பொழுது ஏஐ தொழில்நுட்பத்தை காரணமாக சொல்கிறார்கள்.
சில ஹேஸ் டேக்கை பயன்படுத்தும் பொழுது அந்த வீடியோ வேகமாக போவது மாதிரியும் அதே வீடியோவை குறைவாக போவது மாதிரியும் செய்ய முடியும். அந்த வகையில் விஜய்யின் சில ஹேஸ் டேக்குகளை போடும்பொழுது ஒரு வேளை அதை குறைக்கும் விதமாக ஏதாவது செய்து விட்டார்களா என்ற வகையிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவேளை விஜயின் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடாமல் விட்டார்களா என்று பார்த்தாலும் அந்த வீடியோவுக்கு கீழே கமெண்ட்களை பார்க்கும் பொழுது அனைவருமே உள்ளபடியாக பாடலை கொண்டாடி இருக்கிறார்கள். விஜயின் நடனத்தையும் பாராட்டி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது ஏன் இந்த வீடியோ பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பதுதான் இங்கு அனைவரின் கேள்வியாகவும் பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் வெளியான விஜயின் லியோ பாடல் கோட் படத்தின் பாடல் ஜனநாயகத்தின் பாடலை விட அதிக அளவில் கொண்டாடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜயின் கேரியரில் இந்த பாடல் மட்டும் தான் சரியான வரவேற்பை பெறவில்லை என்பது போல கணக்கு காட்டப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதை விஜய் கண்காணிக்காமல் இருப்பாரா என்றால் கண்டிப்பாக அதை கண்காணிப்பார் தன்னுடைய மேனேஜர் ஜெகதீசை வைத்து இதற்கு எப்படியும் ஒரு தீர்வை கொடுப்பார் என்று இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் அவருடைய வீடியோவில் பேசியுள்ளார்.