Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்ட்டூன் கதாபாத்திரத்தை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக அறிவித்த ராஷ்மிகா!

கார்ட்டூன் கதாபாத்திரத்தை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக அறிவித்த ராஷ்மிகா!
, வெள்ளி, 28 ஜூலை 2023 (09:49 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

இதற்கிடையில் ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் பரவின.
இந்நிலையில் படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, சினிமாவுக்கு வெளியேயும் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான நரூட்டோவை தான் ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் லியோ திரைப்படம் ரிலீஸாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?