Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் லியோ திரைப்படம் ரிலீஸாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

கேரளாவில் லியோ திரைப்படம் ரிலீஸாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
, வெள்ளி, 28 ஜூலை 2023 (09:43 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அவர் தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் இப்போது லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கேரளாவில் சுமார் 650 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த அளவு அதிக எண்ணிக்கையில் கேரள சூப்பர் ஸ்டார்களின் படங்கள் கூட ரிலீஸாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷின் 51 ஆவது படம் அறிவிப்பு