Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனிமல் ஷூட்டிங் நிறைவு… படக்குழுவினரை பிரிந்த வருத்தத்தில் ராஷ்மிகா மந்தனா போட்ட பதிவு!

அனிமல் ஷூட்டிங் நிறைவு… படக்குழுவினரை பிரிந்த வருத்தத்தில் ராஷ்மிகா மந்தனா போட்ட பதிவு!
, புதன், 21 ஜூன் 2023 (16:55 IST)
விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அதே படத்தை இந்தியில் ஷாகித் கபூர் நடிப்பில் ரீமேக் செய்து அதிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவரின் அடுத்த படமான அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.


இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து முடித்துள்ளார். படத்தில் தன்னுடைய காட்சிகளை படமாக்கி முடித்துள்ள அவர் படக்குழுவினரை பிரிந்தது சம்மந்தமாக வருத்தத்தோடு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில் “அனிமல் படத்தில் எனது காட்சிகளை முடித்து ஐதராபாத் திரும்பியுள்ளேன். அந்த படத்தில் நடித்தது குறித்த அளவில்லாத மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். 50 நாட்கள் நான் அனிமல் படக்குழுவினரோடு படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்.  அது மறக்க முடியாத ஒரு அனுபவம். படத்தில் பணியாற்றிய அனைவரும் தேர்ந்த கலைஞர்கள். இந்த குழுவோடு இன்னும் 1000 முறை பணியாற்ற ஆசைப்படுகிறேன். இப்போது படப்பிடிப்பு முடிந்ததும் ஏதோ ஒரு வெற்றிடத்தை உணர்கிறேன்” என தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராவணனாக நடிக்க ஆளே கிடைக்கலையா?... சைப் அலிகான் நடிப்பை விமர்சித்த சக்திமான் முகேஷ் கண்ணா!