நீண்ட தாமதத்துக்குப் பின்னர் வெளியான ‘டான் 3’ அப்டேட்!

vinoth
திங்கள், 24 நவம்பர் 2025 (15:10 IST)
அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தை ரீமேக் செய்து நடித்தார் ஷாருக் கான்.  இந்த படத்தை இயக்குனர் பர்ஹான் அக்தர் இயக்கினார். இவர் டான் படத்தின் கதையை எழுதிய ஜாவேத் அக்தரின் மகன் ஆவார். அந்த படம் வெற்றி பெறவே அதன் இரண்டாம் பாகம் 2011 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

அந்த படமும் நல்ல வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு இப்போது 13 ஆண்டுகள் கழித்து டான் 3 படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் ஷாருக் கானுக்கு பதில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் தேவரகொண்டாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் அவர் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார். அதையடுத்து அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தமானதாக தகவல் வெளியானது. ஆனாலும் அதன் பின்னர் படம் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் இப்போது படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாதத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா காலமானார்.. இந்த முறை உறுதியான செய்திதான்..!

எவன் எப்படி போனா என்னனு இருக்காங்க.. அஜித் விஜயை கண்டபடி பேசிய பிரபலம்

நடிகையர் திலகம் படத்துக்குப் பின் ஆறு மாதங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

சிம்பு –வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமை கைமாறுகிறதா?... லேட்டஸ்ட் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments