1997 முதல் 2004 வரை மிகவும் பிரபலமாக இருந்த டிவி தொடர் சக்திமான். இந்தியில் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் பல இந்திய மொழிகளிலும் வெளியாகி பெரும் புகழ் பெற்றது. அப்போதைய 90ஸ் கிட்ஸ் சக்திமான் காப்பாற்றுவார் என மாடியில் இருந்து குதித்த சம்பவங்களும் ஏராளம்.இந்த தொடரை முகேஷ் கண்ணா தயாரித்து, தானே சக்திமானாகவும் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சக்திமான் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக உள்ளதாக முகேஷ் கண்ணா அறிவித்திருந்தார். ஆனால் கரோனா காரணமாக அந்த படம் தொடங்குவதில் தாமதமானது. சக்திமான் படத்தில் ரண்வீர் சிங் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. அதை மின்னல் முரளி படத்தை இயக்கி பிரபலமான பாசில் ஜோசப் இயக்குவார் என சொல்லப்பட்டது.
ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் சக்திமான் படம் இதுவரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள இயக்குனர் அனுராக் காஷ்யப் “பாசில் ஜோசப்பிடம் நான் பேசியபோது சக்திமான் படத்துக்காக நான் இரண்டு வருடங்களை வீணாக்கிவிட்டேன் எனேறார்” என பாலிவுட்டில் உள்ள ஈகோ அரசியல் குறித்துப் பேசியுள்ளார்.