Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்!

Advertiesment
தனுஷ்

vinoth

, வியாழன், 2 அக்டோபர் 2025 (07:43 IST)
தமிழ் மொழியில் தனது நடிப்பு திறமையால் இரண்டு தேசிய விருதுகளை வென்ற தனுஷ் பாலிவுட்டிலும் கால்பதித்தார்.  2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி அத்ராங்கி ரே படத்தில் இணைந்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக தனுஷ்- ஆனந்த் எல் ராய்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது. ராஞ்சனா வெளியாகி 10 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் “தேரே இஷ்க் மேய்ன்” என்ற படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியிடப்பட்டாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படம் நவம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படம் ரிலீஸாகி நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் குறுகிய இடைவெளியில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ ரிலீஸாகவுள்ளது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாலிவுட் நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பணக்கார நடிகர் ஆனார் ஷாருக் கான்..!