ப்ரதீப், மமிதா பைஜு மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் டியூட் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததால் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. ஆறு நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 35 கோடி ரூபாய் என்றும் போட்டதை விட இரு மடங்கு இலாபத்தை இந்த படம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து இந்த படத்தின் இயக்குனர் கீர்த்தீஸ்வரன் கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ளார். தனது அடுத்த படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள கீர்த்தீஸ்வரன் “ஆக்ஷன் காதல் என ஒரு ஜாலியானக் கலவையாக விஜய்யின் கில்லி இருக்கும். விஜய், பிரகாஷ் ராஜ் நடிப்பு மாஸாக இருக்கும். எனது இரண்டாவது படத்தை கில்லி ஸ்டைலில் உருவாக்க உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.