ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

Bala
திங்கள், 24 நவம்பர் 2025 (19:37 IST)
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிப்பதாகவும் அந்த படத்தை சுந்தர்.சி இயக்கப் போவதாகவும் சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ஏனெனில் தனது திரை வாழ்வில் தனது தனக்கு நெருக்கமான நண்பராக கமல் இருந்தாலும் அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ரஜினி இதுவரை எந்த படமும் நடித்துக் கொடுக்கவில்லை. தக் லைப் படத்தால் 150 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதால் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ரஜினி இரண்டு படங்கள் நடிக்க முடிவெடுத்திருக்கிறார் எனவும், அதில் ஒன்றுதான் இந்த படம் எனவும் சொல்லப்பட்டது.
 
 
ஆனால் இந்த படத்திலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்து சுந்தர்.சி எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். சுந்தர்.சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காமல் போனதால் இந்த முடிவை அவர் எடுத்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து, வேறு பல இயக்குனர்களிடமும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கதை கேட்டு வந்தது. அதில் பல இயக்குனர்களின் பெயரும் அடிபட்டது.
 
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் எம்.எஸ் பாஸ்கர் ஆகியோரை முக்கிய வேடத்தில் நடித்த பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினி நடித்த படத்தை இயக்கப் போகும் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார் என்ன செய்திகளை கசிந்துள்ளது. அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்ததாலும் முழு கதையும் அவர் தயாராக வைத்திருப்பதாலும் ரஜினியின் புதிய படத்தை அவரே இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எல்லாம் சரியாக அமைந்தால் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் துவங்கும் என சொல்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

அடுத்த கட்டுரையில்
Show comments