Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று மாலை ‘கூலி’ அப்டேட்.. சன்பிக்சர்ஸ் அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் குஷி..!

Advertiesment
கூலி

Mahendran

, திங்கள், 23 ஜூன் 2025 (11:40 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி உள்ள திரைப்படம் 'கூலி'. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
 
இந்த நிலையில், இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு சன் பிக்சர்ஸ் எக்ஸ் பக்கத்தில் அறிவிக்கப்படும். இதனை தொடர்ந்து, இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பாக இது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த படத்தில் டி. ராஜேந்தர் ஒரு பாடலை பாடியுள்ளதாக கூறப்படும் நிலையில், அநேகமாக அந்தப் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ரஜினிகாந்த், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, ஷோபின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் அனிருத் இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரையுலகுக்கு விக்ரம்மை அறிவித்த ‘சேது’.. 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரி ரிலீஸ்!