Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் நடந்த ரஜினி & ஹெச் வினோத் சந்திப்பு…உறுதியாகிறதா கூட்டணி?

Advertiesment
கமல்ஹாசன்

vinoth

, வியாழன், 19 ஜூன் 2025 (10:52 IST)
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஹெச் வினோத், அதன் பின்னர் தீரன், வலிமை, துணிவு என அடுத்தடுத்து மாஸ் நடிகர்களின் படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார்.

கமல்ஹாசனோடு ஒரு படம் பண்ண ஒப்பந்தம் ஆன, சில காரணங்களால் அந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டது. இப்போது அவர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி வருகிறார். இதுதான் விஜய்யின் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனநாயகன் படத்தை முடித்ததும் தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது திடீரென்று அவர் ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக ஏற்கனவே ரஜினி- ஹெச் வினோத் சந்திப்பு நடந்த நிலையில் சமீபத்தில் இரண்டாவது முறையாக சந்திப்பு நடந்துள்ளது. இதனால் ரஜினியின் அடுத்த படத்தை ஹெச் வினோத் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகேஷ் பாபு படத்துக்காக 50 கோடி ரூபாயில் செட்… வாரணாசியை ரி க்ரியேட் செய்யும் ராஜமௌலி!