சமீபகாலமாக ரஜினி வெறும் ஆக்ஷன் படங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலானப் படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது அவர் இல்லை டூப்தான் என்று தெரிந்தாலும் ரசிகர்கள் தங்கள் தலைவருக்காக விசிலடித்துக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இரத்தமாகப் பார்த்து பூத்துப் போனக் கண்களுக்கு சிறு ஆறுதலாக ரஜினி அடுத்து சுந்தர் சி யோடு இணைந்து பணியாற்றவுள்ள படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சுந்தர் சி தற்போதைய இயக்குனர் போல திரையில் இரத்த ஆற்றை ஓடவைக்கமாட்டார்.
தற்போது சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதையடுத்து சுந்தர் சி விஷால் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் ரஜினி படம் காரணமாக தற்போது விஷால் படத்தை ஒத்திவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி படத்தை முடித்த பின்னரே விஷால் படத்தைத் தொடங்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.