Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கும் கமலுக்கும் நடந்த அந்த வாக்குவாதம்.. சீக்ரெட்டை உடைத்த மிஷ்கின்

Advertiesment
மிஷ்கின்

Bala

, திங்கள், 10 நவம்பர் 2025 (11:17 IST)
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். இப்போது நடிகராகவும் சினிமாவில் தெறிக்கவிட்டு வருகிறார். பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் டிராகன் படத்தில் இவருடைய கேரக்டர் பலரையும் ரசிக்க வைத்தது. கல்லூரி பேராசியராக இவருடைய கேரக்டர் பெரியளவில் பேசப்பட்டது. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின் பிசாசு படத்தின் மூலம் அனைவரையும் ஈர்த்தார்.
 
ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அஞ்சாதே, துப்பறிவாளன், சைக்கோ போன்ற படங்கள் இவரது சிறந்த படைப்புக்கு உதாரணம். கதையை வித்தியாசமாக சொல்வதில் மிகச்சிறந்த இயக்குனர் மிஷ்கின். அதுமட்டுமில்லாமல் திரில்லர் பின்னணியிலும் இவருடைய திரைக்கதை பலரையும் திகிலடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் மிஷ்கினின் ஒரு பேட்டி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.
 
கமலின் மிகச்சிறந்த ரசிகராக இருந்திருக்கிறார் மிஷ்கின். கமல் பிறந்த நாள் என்பதால் கமலுடனான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து வருகிறார். அதில் கமல் ரஜினியை வைத்து தான் ஒரு கதையை ரெடி செய்து வைத்தேன் என்றும் அதை என்னுடைய உதவியாளர்களிடம் சொன்னதாகவும் அந்த கதை நன்றாக இருந்தது என்றும் கூறினார். ஆனால் இதை நான் கமலிடமோ ரஜினியிடமோ சொல்லமாட்டேன்.
 
இது ஒரு சரித்திரக்கதை. தாணுவிடம் சொன்னேன். இதை படமாகவும் பண்ண மாட்டேன். ஒரு பக்கம் ரஜினி ஒரு பக்கம் கமல் எப்படி இருக்கும்? என்று சொல்லி மெய்சிலிர்த்தார் மிஷ்கின். அதுமட்டுமில்லாமல் கமலுடன் தனக்கு ஏற்கனவே வாக்குவாதம் இருந்ததாகவும் கூறியிருக்கிறார். அதாவது கமலை வைத்து மிஷ்கின் ஒரு படத்தை எடுக்க இருந்தாராம்.
 
அப்போது மிஷ்கினுக்கு சின்ன வயது. கமலுக்கு அந்த கதையில் கொஞ்சம் முரண்பாடு இருந்ததாம். அதை மாற்றிக் கொள்ள மிஷ்கினுக்கு உடன்பாடே இல்லையாம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த படமே வேண்டாம் என்று விலகிவிட்டார்களாம். இருந்தாலும் கமல் எனக்கு ஆசிரியர். நான் வணங்கும் இரு நபர்கள் ஒன்று இளையராஜா மற்றொருவர் கமல் என மிஷ்கின் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலீஸுக்கு முன்பே 315 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’!