Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்!

Advertiesment
விஜய்

vinoth

, வியாழன், 5 ஜூன் 2025 (11:58 IST)
கடந்த சில ஆண்டுகளாக பழைய படங்கள் ரி ரிலீஸ் ஆகி ரசிகர்கள் இடையே ஆதரவைப் பெற்று வருகின்றன.  இதில் உச்சபட்ச வெற்றியைப் பெற்றது விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம். கடந்த ஆண்டு இந்த படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரி ரிலீஸில் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது இதுவே முதல் முறை.

அதன் பின்னர் இந்த ஆண்டு ரிலீஸான சச்சின் படமும் 10 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இதையடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் தூசு தட்டப்பட்டு ரிலீஸாகி வருகின்றன.

அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு ரிலீஸான ‘அண்ணாமலை’ திரைப்படம் அவரின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி ரி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் சரத்பாபு, குஷ்பூ, ராதாரவி, மனோரமா உள்ளிட்டவர்கள் நடிக்க சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாலச்சந்தரின் கவிதாலயா பிலிம்ஸ் தயாரித்திருந்தது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘உன் சத்தியத்த உலகத்துல எவனுமே நம்பமாட்டான்… ‘ கவனம் ஈர்க்கும் இயக்குனர் ராமின் பறந்து போ டீசர்!