விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகவும், விஜய்யின் பிறந்த நாளில் முக்கிய அப்டேட் வெளியாகும் என்றும் செய்திகள் கூறுகின்றன.
தளபதி விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த படத்தின் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய நிலையில், சென்னை, கொடைக்கானல் உள்பட பல பகுதிகளில் பல படப்பிடிப்புகள் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி, இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்றும், அனேகமாக சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கும் நிலையில் மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.