இயக்குனர் விக்ரமன் பட்டறையில் இருந்து வந்து நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் ராஜகுமாரன். பின்னர் தேவயானியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் அவர் இயக்கிய படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
இதையடுத்து அவர் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அவரின் மோசமான நடிப்புக் காரணமாக இணையத்தில் கேலிக்கு ஆளானார். இந்நிலையில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் படத்தில் காமெடி காட்சி ஒன்றில் ராஜகுமாரனை நடிக்கவைத்து தன் ஸ்டைலில் செம்ம கலாய் கலாய்த்திருந்தார். அந்த காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. ஆனால் அதன் பின்னர் நடிகராகவும் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.
சமீபகாலமாக திரையுலக பிரபலங்களை மட்டம்தட்டி பேசி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் ராஜகுமாரன். அந்த வகையில் இன்று அவர் தொட்டிருப்பது நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள விஜய்யைதான். விஜய்யின் அரசியல் வருகை குறித்தப் பேச்சில் “விஜய்யும் என் மனைவி தேவயானியும் பிறந்தது ஜூன் 22 ஆம் தேதிதான். அதனால்தான் இருவரும் இப்போது வரை உச்சத்தில் உள்ளார்கள். 30 வருஷமாக அவரை நாங்கள் பொத்தி பொத்தி வைத்தோம். இப்போது அவரால் எப்படி மக்களோடு போய் வெய்யிலில் நிற்க முடியும். முதல்வர் ஸ்டாலின் போல அவரால் தெருவில் நடக்க முடியுமா? அவர் யாருடனாவது கூட்டணி வைக்கவில்லை என்றால் டெபாசிட் கூட வாங்க முடியாது” எனக் கூறியுள்ளார்.