தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பூரி ஜெகன்னாத். அவரின் பல ஹிட் படங்கள் தமிழிலேயே ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. எம் குமரன் படமெல்லாம் அவர் இயக்கிய படத்தின் ரீமேக்தான். ஆனால் தற்போது அவர் ஒரு பின்னடைவில் உள்ளார்.
விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவான லைகா திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக வந்தது. ஆனால் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக அவரின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவானது. இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு பேன் இந்தியா படத்தை இயக்கி, தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் நடந்துள்ளது. இதில் விஜய் சேதுபதி கலந்துகொள்ளவில்லை. பூரி ஜெகன்னாத் மற்றும் தயாருப்பாளர் ஷார்மி ஆகியோர் மட்டும் கலந்துகொண்டுள்ளனர்.