Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘என் மனைவிக்கு பேச வராது… அவருக்கும் சேர்த்து…’ - மகனின் பட நிகழ்ச்சியில் VJS நெகிழ்ச்சி!

Advertiesment
phoenix

vinoth

, சனி, 28 ஜூன் 2025 (10:29 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடாததால் அதன் பிறகு நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டார். இதற்கிடையில் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபீனிக்ஸ் படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஷூட்டிங் உள்ளிட்ட பணிகள் எல்லாம் முடிந்து ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்துகொண்டு பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

அதில் “என் மகனை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. அவனுக்கு இப்படி ஒரு அனுபவம் கெடச்சிருக்கு. என் மகனை முதல் முதலா ஸ்கூலில் போய் விட்டுட்டு வந்தப்ப மாதிரி ஒரு உணர்வு கிடைச்சிருக்கு.  என் முதல் பட ஆடியோ வெளியீட்டப்பக் கூட நான் இவ்ளோ படபடப்பா இல்ல. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.  என்னை விட என் மனைவிக்குதான் ரொம்ப சந்தோஷம், அவருக்குப் பேச வராது. அவருக்கும் சேத்து நானே எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘அஜித் 64’ ‘ படத்தின் அறிவிப்பு எப்போது?... சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்!