Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்ஹாசன்?

Advertiesment
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்

vinoth

, திங்கள், 23 ஜூன் 2025 (15:32 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றை 'வீர வீர சூரன்' படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அந்த நிலையில், இந்த படத்தின் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், அடுத்த கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு குறித்த ஆலோசனை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் அருண்குமார் இந்த படத்தின் கதைக்கு விஜய் சேதுபதி அல்லது சூர்யா பொருத்தமாக இருப்பார் என்று கூறிய நிலையில், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அனேகமாக இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஹீரோ யார் என்பதை படக்குழு முடிவு செய்து விடும் என்றும் கூறப்படுகிறது. 

ஆனால் இப்போது அந்த படத்தில் கதாநாயகனாக கமல்ஹாசனே நடிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. கமல்ஹாசன் அடுத்து அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதை முடித்ததும் இந்த படத்தில் கமல் நடிப்பார் என சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு படத்துக்காக தனுஷிடம் NOC வாங்கும் வெற்றிமாறன்… அப்ப வடசென்னை தானா?