Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் வில்லனாக இணையும் பிரபல தமிழ் ஹீரோ!

Advertiesment
பிரபாஸ்

vinoth

, புதன், 25 ஜூன் 2025 (14:29 IST)
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா, ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  இயக்கிய அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அனிமல் படம் ஆணாதிக்கக் கருத்துகள் விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

அவர் இயக்கிய அர்ஜுன் ரெட்டி படத்தின் மீதும் இந்த விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி கதாநாயகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அடுத்து அவர் பிரபாஸின் 25 ஆவது படமான ஸ்பிரிட் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படம் ஒரு காவல்துறை அதிகாரியைப் பற்றிய கதை என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தில் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு தமிழ் ஹீரோவை நடிக்க வைக்கவுள்ளனராம். அதற்கான பேச்சுவார்த்தைகள் இப்போது நடந்து வரும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேஷனல் க்ரஷ்னு சொல்வதில் ஆச்சர்யமில்லை.. ராஷ்மிகாவை ஸ்ரீதேவியோடு ஒப்பிட்டுப் பாராட்டிய நாகார்ஜுனா…!