Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாடகர் எஸ்.பி.பி சாருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்... நடிகர் தனுஷ்

பாடகர் எஸ்.பி.பி சாருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்... நடிகர் தனுஷ்
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (19:19 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி கேட்டதும் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அது மட்டுமின்றி அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்

இந்த நிலையில் தற்போது எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும் அவர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.
 
webdunia

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்தியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

தற்போது, பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை  அச்சப்படும் அளவிற்கு  மோசமாக  இல்லை நலமாகவே இருக்கிறார் என்று எஸ்.பி.பியின் மகன் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்து கூறிய அஜித்குமார்