Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்து கூறிய அஜித்குமார்

Advertiesment
Ajith Kumar
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (19:14 IST)
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமா உலகிற்கு வந்து 45 ஆண்டுகள் முடிவடைந்து 46 வது ஆண்டில் நுழைகிறார்.

45ஆண்டுகளில் 167 படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்துக்கு, அண்ணாத்த அவரது 168 ஆவது படம்.

அவரது 45 வருட சினிமா பயணம் வெற்றிகரமாக அமைந்ததை ஒட்டி பல திரைப் பிரபலங்களும்,, பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களும் ஹேச்டேக் உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வாழ்த்துகள் தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில்,  தனிப்பட்ட முறையில் நடிகர் அஜித்குமா,  ரஜினிகாந்துக்கு போன் செய்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் 30 நிமிடங்கள் உரையாடிவதாகவும், சினிம உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் பேசியதாகத் தகவல்கள் வெளியாகிறது.

கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில், சூப்பர்ஸ்டார் @rajinikanth
அவர்களின் 45 ஆண்டுகால திரையுலக பயணத்தை கொண்டாடும் விதமாக #45YearsofRajinism #SpecialDP வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறேன்… விஜய்சேதுபதி பட நடிகர் வேதனை