சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.
நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. spicejet boeing 737 ரக விமானத்தில் பறந்தபடியே வெய்யோன் சிலை பாடலை வெளியிட்டனர்.
அண்மையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூரரைப் போற்று படத்தின் " காட்டு பயலே" பாடலை படக்குழு வெளியிட்டிருந்தனர்.ஜி.வி பிரகாஷின் வித்யாசமான இந்த பாடல் அனைவரையும் ஈர்த்து சூப்பர் ஹிட் அடித்துவிட்டது. இந்நிலையில் இது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் " ஒவ்வொரு முறையும் உங்கள் இசையில் புதிதாக கண்டுபிடிப்பதை பார்த்து ஈர்க்கப்பட்டிருக்கிறேன். சூரரைப் போற்று பாடல்கள் கூடுதல் சிறப்பானதற்கு நீங்கள் தான் காரணம் என்றுஜி.வி பிரகாஷைபாராட்டியுள்ளார்.
இதற்கு ஜிவி இன்னும் நிறைய வர உள்ளது சார் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். " காட்டு பயலே" பாடல் தற்ப்போது வரை 6.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில் 12 இடத்தில் சென்சார் மியூட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் முக்கியமக காட்சிகள் எதுவும் மிஸ் ஆகுமா என படக்குழுவினர் யோசித்து வருகின்றன்றனர். இப்படம் எதிர்ப்பார்ப்புரியதாக இருப்பதால் ரசிகர்கள் ரிலீசுக்காக ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.