பைசன் பட வெற்றிக்கான ப்ரஸ் மீட்டில் ட்யூட் படம் குறித்து பா.ரஞ்சித் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் பைசன். இந்த படமும் ப்ரதீப் ரங்கநாதனின் ட்யூட் படமும் ஒரே சமயத்தில் வெளியானது. எனினும் பைசனும் கவனிக்கத்தக்க அளவில் வெற்றி பெற்றது.
இதுகுறித்து பட வெற்றி நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் ”படம் ரிலீஸானது முதலே ஓடவிடக்கூடாது என பலர் வேலை செஞ்சாங்க. நிறைய பேர் பைசன் போகாதீங்க.. ட்யூட் போங்க என சொன்னார்கள். ஆனா ட்யூட் டைரக்டர் அவர் பாணியில் வெச்சு செஞ்சுவிட்டார்.
உண்மையாகவே அந்த பட வெற்றியும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்று ஒரு சாதாரண கமர்ஷியல் படமாக இருந்தாலும், சமூகநீதி பற்றிய ஆழ்ந்த படமாக இருந்தாலும் இளைஞர்கள் தெளிவான கண்ணோட்டத்தோடு இறங்கி செயல்படுகின்றனர். விரைவில் தமிழ் சினிமாவும் பல கோடி வசூலை குவிக்கும் படங்களை உருவாக்க இந்த இளைஞர்கள் காரணமாக இருப்பார்கள்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K