தற்போது கோலிவுட்டில் அதிகம் பேசப்படும் நடிகராக திகழ்பவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்குனராக கோமாளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இரண்டாவது படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். லவ் டுடே திரைப்படம் தான் அவர் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம். அந்தப் படம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பதிவு செய்தது. இந்த கால தலைமுறையினருக்கு ஏற்றவாறு கதையை தேர்ந்தெடுத்து அந்த படத்தை எடுத்தார் பிரதீப் ரங்கநாதன். எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் அதாவது இளைஞர்களிடம் அந்தப் படத்தை சிறப்பாக கொண்டு சேர்த்தது.
அதனை தொடர்ந்து டிராகன் திரைப்படத்திலும் நடித்தார். அதுவும் ஒரு வித்தியாசமான கதைகளத்தில் இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்ற திரைப்படமாக அமைந்ததனால் அதுவும் ஒரு மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டூயூட் திரைப்படமும் ரசிகர்களிடம் அமோக வெற்றியை பெற்றது. தொடர்ந்து தன்னுடைய மூன்று படங்களின் மூலம் 100 கோடி வசூலை பெற்றுக் கொடுத்தார் பிரதீப் ரங்கநாதன்.
தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து வருவதால் இளைஞர்கள் மத்தியில் இப்போது டாக் ஆப் தி டவுன் ஆக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இந்த நிலையில் சமீபத்திய ஒரு கருத்துக்கணிப்பில் பிரதீப் ரங்கநாதன் முதலிடத்தில் இருக்கிறார். அதாவது அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கை தரும் நடிகர்களுக்கான கருத்துக்கணிப்பில் 55% வாக்குகளை பெற்று பிரதீப் ரங்கநாதன் முதலிடத்தில் இருக்கிறார். 22 சதவீதம் வாக்குகளை பெற்று சிவகார்த்திகேயன் இரண்டாவது இடத்தை தக்க வைத்திருக்கிறார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
மூன்று திரைப்படங்களிலேயே நடிகர் சிவகார்த்திகேயனை மிஞ்சி இளம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளார் பிரதீப் ரங்கநாதன் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில் நெட்டிசன்கள் இந்த தகவலை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது சமீபகாலமாக சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் இடையே தான் போட்டி இருப்பதாக அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதுவும் பெண்கள் விஷயமாக இருந்தாலும் மற்ற விஷயமாக இருந்தாலும் அதில் தனுஷின் பெயர்தான் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன.
இதை பரவ செய்வது சிவகார்த்திகேயன் தான். தனுஷை அவர்தான் டார்கெட் செய்து அடிக்கிறார் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது பிரகதீப் ரங்கநாதன் முதலிடத்தில் இருப்பதை அறிந்து சிவகார்த்திகேயன் அவருடைய டார்கெட்டை மாற்றி விடுவார் , தேவையில்லாமல் தனுஷை சீண்டி கொண்டிருக்கிறோமே? முதலில் இவனை அடிக்கணும் என்று ரூட்டை மாற்றி விடுவார் என சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்