ப்ரதீப் படத்தில் சிவகார்த்திகேயனா?... ‘ட்யூட்’ படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

vinoth
சனி, 26 ஜூலை 2025 (08:53 IST)
கோமாளி படத்தின் மூலம் தன்னை ஒரு வணிக இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட ப்ரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

அதன் பின்னர் அவர் நடித்த ‘டிராகன்’ திரைப்படமும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் நடித்து வருகிறார்.  இதற்கிடையில் அவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்  Dude படத்தின் மூலம் பேன் இந்தியா ஹீரோவாக செல்லவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கராவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கீர்த்திவாசன் என்பவர் இயக்குகிறார். மமிதா பைஜு கதாநாய்கியாக நடிக்க, சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்புப் படத்துக்கு முன்பே ரிலீஸாகிறதா சூர்யா 46?

வெள்ளிக் கிழமை காலேஜ் போங்க… லீவ் நாள்ல வந்து படம் பாருங்க- நடிகர் கவின் பேச்சு!

எனக்கும் அந்த ஆசை துளிர்விட்டுள்ளது… மருதநாயகம் குறித்துக் கமல் பாசிட்டிவ் அப்டேட்!

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

அடுத்த கட்டுரையில்
Show comments