Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ரவீனாவின் வேட்புமனு நிராகரிப்பு!

Siva
வெள்ளி, 25 ஜூலை 2025 (18:38 IST)
வருகிற ஆகஸ்ட் 10 அன்று நடைபெறவிருக்கும் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட நடிகை ரவீனா தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன், பரத், மற்றும் தினேஷ் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ்கர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.
 
போஸ் வெங்கட் போட்டியிலிருந்து விலகியதால், நிரோஷா செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
 
கடந்த திங்கள் முதல் புதன் வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நேற்று  பரிசீலனை நடந்தது. தினேஷ் அணியின் சார்பில் போட்டியிட்ட ரவீனாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
விஜய் டிவியின் 'சிந்து பைரவி' தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டு விலகியதால், அவருக்கு ஏற்கெனவே ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. "கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, இரண்டு கதாநாயகிகள் கதை என தெரிந்ததால் விலகினேன்" என ரவீனா விளக்கமளித்திருந்தார். தற்போது, இந்த தடை காரணத்தை காட்டியே அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ரவீனாவின் வேட்புமனு நிராகரிப்பு!

தீபாவளி ரிலீஸ் போட்டியில் இணைந்த பிரதீப் ரங்கநாதன் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ALTT, ULLU உள்ளிட்ட 24 ஆபாச OTT தளங்களுக்கு தடை! - மத்திய அரசு அதிரடி!

கிளாமர் உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் புகைபடத் தொகுப்பு!

வித்தியாசமான உடையில் க்யூட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments