நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடித்து வரும் இரண்டு படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தொழில்நுட்பப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் முதல் விளம்பரப் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'டியூட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், இந்தப் படம் தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
செப்டம்பர் 18 ஆம் தேதி 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வெளியாகும் நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளிக்கு 'டியூட்' படம் வெளியாவதால், அடுத்தடுத்து ஒரே மாத இடைவெளியில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. மேலும், தீபாவளி தினத்தில் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருப்பு' என்ற படமும் ரிலீசாக உள்ளதால், ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் மோத வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.