Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மே மாதத்தில் பொன்னியின் செல்வன்! அடுத்த பேன் இந்தியா படத்தின் ரிலீஸ் அப்டேட்!

மே மாதத்தில் பொன்னியின் செல்வன்! அடுத்த பேன் இந்தியா படத்தின் ரிலீஸ் அப்டேட்!
, சனி, 5 பிப்ரவரி 2022 (09:45 IST)
கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் வரிசையாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் அடுத்த சில மாதங்களில் அடுத்தடுத்து வரிசையாக பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் பேன் இந்தியா படங்களின் ரிலீஸ் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அந்த வரிசையில் வலிமை, எதற்கும் துணிந்தவன், ஆர் ஆர் ஆர், டான், பீஸ்ட், கேஜிஎப் 2 என வரிசைகட்டி நிற்கின்றன படங்கள்.

இந்த வரிசையில் மற்றொரு படமாக பொன்னியின் செல்வன் திரைப்படமும் இணைந்துள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் மே மாதம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படைப்பான பொன்னியின் செல்வனில் ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டான் படத்தின் பிஸ்னஸை இன்னும் தொடங்காத லைகா… இதுதான் காரணமா?