கொரோனா காரணமாக வாய் மற்றும் மூக்கை மறைக்கும் விதமாக மாஸ்க் அணிவது உலகம் முழுவதும் அத்தியாவசியமாகியுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் மாறியுள்ளன. அதில் ஒன்று மாஸ்க் அணிவது. கொரோனா பரவலை பெரிதும் கட்டுப்படுத்த இந்த மாஸ்க் அணியும் பழக்கம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் புதிய வகையிலான மாஸ்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. கோஸ்க் என அழைக்கப்படும் இந்த மாஸ்க் மூக்கை மட்டும் மறைக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாப்பிடும் போதோ அல்லது தண்ணீர் குடிக்கும்போதே மாஸ்க்கை கழட்ட வேண்டிய தேவை இருக்காது.