Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காந்தாராவை அவமதிக்காதீங்க ப்ளீஸ்! - இயக்குநர் ரிஷப் ஷெட்டி வேண்டுகோள்!

Advertiesment
Kantara chapter 1

Prasanth K

, புதன், 8 அக்டோபர் 2025 (09:35 IST)

கன்னட படமான காந்தாரா வெளியாகி பெரும் ஹிட் அடித்து வரும் நிலையில், அதில் வரும் கதாப்பாத்திரத்தை பொதுவெளியில் அவமதிக்க வேண்டாம் என இயக்குநர் ரிஷப் ஷெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து 2022ல் வெளியான படம் காந்தாரா. அதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் ‘காந்தாரா சாப்டர் 1’ என்ற பெயரில் வெளியாகி தற்போது பெரும் ஹிட் அடித்துள்ளது. ஏராளமான மக்கள் வார நாட்களிலேயே படத்தை பார்க்க குவிந்து வருகின்றனர்.

 

அதேசமயம் பலர் படம் மீதான கடுமையான விமர்சனங்களையும் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிலர் படம் ஓடும் திரையரங்குகளுக்கு பஞ்சுருளி போல வேடமிட்டு செல்லும் வீடியோக்கள் வைரலானது.

 

இதனை தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து பேசியுள்ள இயக்குநர் ரிஷப் ஷெட்டி, “காந்தாரா கதாப்பாத்திரத்தை பொதுவெளியில் அவமதிக்க வேண்டாம். காந்தாரா படத்தில் வரும் கடவுள் கதாப்பாத்திரம் துளு நாடான கர்நாடகாவின் பெருமை. கடவுளின் புனித தன்மை எப்போது காக்கப்பட வேண்டும்.

 

தெய்வ வழிபாடு என்பது ஒரு ஆழமான ஆன்மிக மரபு. காந்தாரா படம் பொழுதுபோக்கிற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை. அவமதிக்கும் செயல்கள் எங்கள் மத நம்பிக்கை, துளு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துகின்றன” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னம்மா டான்ஸ் இது?… லோகா புகழ் கல்யாணியைக் கலாய்க்கும் ரசிகர்கள்!