நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, 'காந்தாரா'வின் வெற்றிக்கு முக்கிய காரணம், தன் மனைவி பிரகதி ஷெட்டி அளித்த ஆதரவே என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய ரிஷப் ஷெட்டி, "என் மனைவி பிரகதி மட்டும் இல்லையென்றால், என்னால் இந்த படத்தை முடித்திருக்கவே முடியாது" என்று குறிப்பிட்டார்.
'காந்தாரா' படப்பிடிப்பு 2021-ல் தொடங்கியபோது, ரிஷப் ஷெட்டி படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால், பிரகதி ஷெட்டி குடும்ப பொறுப்புகளை முழுமையாக ஏற்று கொண்டதாக அவர் கூறினார். தான் படப்பிடிப்புக்குச் செல்லும்போதெல்லாம் பிரகதி பிரார்த்தனைகளை தொடங்குவார்.
படப்பிடிப்புக்காக 5 ஆண்டுகளாக, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது உட்பட அனைத்தையும் என மனைவி தான் செய்தார். குடும்பத்தை பிரகதி கவனித்து கொண்டதாலேயே, தான் பட வேலைகளில் கவனம் செலுத்த முடிந்தது என்று ரிஷப் ஷெட்டி பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், இனிமேல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த ஒரு சிறிய இடைவெளி எடுக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.