Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நண்பன் படத்தை விஜய் இயக்க சொன்னது இவரைதான் – டிவிட்டரில் கசிந்த ரகசியம் !

நண்பன் படத்தை விஜய் இயக்க சொன்னது இவரைதான் – டிவிட்டரில் கசிந்த ரகசியம் !
, செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (14:40 IST)
நண்பன் படத்தில் விஜய்

நடிகர் பார்த்திபனை விஜய் தான் நடித்த நண்பன் படத்தை இயக்க சொன்னதாக அவர் டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் திரைப்படம் அவருக்கு ஒரு முக்கியமானப் படமாக அமைந்தது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் இந்த படத்தை தன்னைதான் முதலில் விஜய் இயக்க சொன்னார் என இயக்குனர், நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர் ஒருவர் விஜய்யோடு, பார்த்திபன் இருக்கும் புகைப்படம் ஒன்றை டிவிட்டரில் பகிர்ந்து ’தளபதி 65-ல் இவர்கள் இருவரும் இணைந்தால் மாஸாக இருக்கும்’ எனக் தெரிவித்து அதில் பார்த்திபனையும் டேக் செய்திருந்தார்.

இந்த டிவிட்டிற்கு கமெண்ட் செய்து ஷேர் செய்த  பார்த்திபன் ‘Massக்கு MASTER-ஐ பிடிக்கும். Masterக்கு இந்த நண்பனைப் பிடிக்கும்.'நண்பன்' படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார். 'அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார். நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் விஜய்யின் அடுத்த படத்தை பார்த்திபன் இயக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரதி ராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை பட புதிய ஸ்னீக் பீக் காட்சி!