Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 14 January 2025
webdunia

பியூஸ் போன பல்பு.... குட்டி கத பாடலை டிக் டாக் செய்த அனிருத் !

Advertiesment
பியூஸ் போன பல்பு.... குட்டி கத பாடலை டிக் டாக் செய்த அனிருத் !
, திங்கள், 17 பிப்ரவரி 2020 (11:38 IST)
தளபதி விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே மீதம் இருப்பதாகவும் இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என படக்குழுவினர்களிடமிருந்து தகவல் வெளிவந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
 
கல்லூரி பேராசிரியாக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவரது மாணவராக சாந்தனு நடித்துள்ளார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
‘ஒரு குட்டி கதை' என்ற முதல் சிங்கிள் டிராக் கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியாகியிருந்தது. அருண்ராஜா காமராஜ் வரிகளில் உருவான இப்பாடலை விஜய்யின் unique குரலில் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார்.  தற்போது 13 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பாடலுக்கு அனிருத் டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்