Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரோட்டா மாஸ்டரிடம் பயிற்சி எடுக்கும் விஜய் சேதுபதி… எதற்குத் தெரியுமா?

பரோட்டா மாஸ்டரிடம் பயிற்சி எடுக்கும் விஜய் சேதுபதி… எதற்குத் தெரியுமா?

vinoth

, செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (09:24 IST)
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது.

இதனால் பாண்டிராஜ் தன்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதையை உருவாக்க ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். திரைக்கதையை எழுதி முடித்த பாண்டிராஜ் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அந்த படத்தைத் தொடங்கவுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறாராம். அதற்காக கடந்த சில தினங்களாக ஒரு பரோட்டா மாஸ்டரை தன்னுடைய அலுவலகத்தி வைத்து பரோட்டா போடுவதற்கு பயிற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் குரல் மீது தமிழ் ரசிகர்களுக்கு தனி அன்பு… மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பி. சுசீலா நெகிழ்ச்சி!