Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவின் கங்குவா டீசர் எப்போது?... வெளியான தகவல்!

சூர்யாவின் கங்குவா டீசர் எப்போது?... வெளியான தகவல்!

vinoth

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (11:29 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது படத்தின் பிஸ்னஸை தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

படத்தில் இருந்து இதுவரை ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் நெருப்பு பாடல் ஆகியவை ரிலீஸ் ஆகி கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி படத்தின் இயக்குனர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் ஒன்று வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜமௌலி மகேஷ் பாபு படத்தில் இணைகிறாரா விக்ரம்?... அவரே பகிர்ந்த தகவல்!