Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கங்குவா 2 வோடு மோத எல்லோரும் தயங்குவார்கள்… தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நம்பிக்கை!

கங்குவா 2 வோடு மோத எல்லோரும் தயங்குவார்கள்… தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நம்பிக்கை!

vinoth

, சனி, 3 ஆகஸ்ட் 2024 (13:50 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது படத்தின் பிஸ்னஸை தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. முதல் பாகத்துக்கான இறுதியில் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டம் இடம்பெறுமென்றும் அதில் கார்த்தி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா “கங்குவா 1 படம் கூட வேணா தெரியாம யாரும் தங்கள் படத்தை ரிலீஸ் செய்யலாம். ஆனால் கங்குவா 2 ரிலீஸ் ஆகும் போது 100 சதவீதம் யாருமே இந்த படத்தோடு தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டார்கள்” என அதீத நம்பிக்கையோடு பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயநாடு நிலச்சரிவு.. நேரில் ஆய்வு செய்தவுடன் ரூ.3 கோடி நிவாரண நிதியளித்த நடிகர்..!