Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதியிலேயே நிறுத்தப்பட்ட பா விஜய்யின் படம்… இதுதான் காரணமா?

பாதியிலேயே நிறுத்தப்பட்ட பா விஜய்யின் படம்… இதுதான் காரணமா?
, வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (18:11 IST)
பா விஜய் இயக்கத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் நடிக்கும் மேதாவி படம் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர்களில் ஒருவர் பா விஜய். இவர் ஏற்கனவே ஞாபகங்கள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் பிரம்மாண்டமான படமாக ஜீவா மற்றும் அர்ஜுன் நடிப்பில் மேதாவி தொடங்கப்பட்டது.

ஆனால் தொடங்கி பாதி படம் முடிந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்கு காரணம் நடந்த சில நாட்கள் படப்பிடிப்பிலேயே கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் செலவாகிவிட்டதாம். அதனால் மேற்கொண்டு படத்தை எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டாராம் தயாரிப்பாளர். இப்போது பா விஜய் பிரபுதேவா நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா ரஞ்சித் படத்தில் இருந்து விலகிய அட்டகத்தி தினேஷ்… சார்பட்டா நடிகருக்கு வாய்ப்பு!