தமிழில் ஹிட் அடித்த ஓ மை கடவுளே திரைப்படம் இப்போது கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் ஒடிடி தளத்தில் வெளியான போதும் மிகப்பரவலான கவனத்தைப் பெற்றது. இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டினர். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார்.
இந்த படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இப்போது தெலுங்கில் அவரே இயக்கி வருகிறார். அதே நேரத்தில் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிப்பிலும் உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரபுதேவாவின் சகோதரரான நாகேந்திர பிரசாத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இப்போது பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளாராம்.