Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகேந்திரனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு !

மகேந்திரனுக்கு திமுகவில் புதிய  பொறுப்பு !
, சனி, 7 ஆகஸ்ட் 2021 (16:12 IST)
நடிகர் கமல்ஹாசனின் ம.நீ.ம கட்சியிலிருந்து விலகிய மகேந்திரனுக்கு திமுகவில் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியை தழுவிய நிலையில் மநீம கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்த பலர் கட்சியிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. மநீம கட்சியின் டாக்டர் மகேந்திரனும் கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதுகுறித்து, டாக்டர் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில், பெரியாரின் சுயமரியாதை சித்தாந்தங்களையும்,அண்ணாவின் மாபெரும் தமிழ்க்கனவையும்தொடர்ந்து சுமந்து சென்ற சுயமரியாதை சூரியன் கலைஞர் அவர்களின் பாதையில், கழகத்தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு. @mkstalin அவர்களின் தலைமையில்... இனி பெருமையுடன் தொண்டனாக நானும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், திமுகவில் இணைந்துள்ள டாக்டர் மகேந்திரனுக்கு தகவல்  தொழில்நுட்ப இணைச்செயலாளர் விருது வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல ஆண்டுகளுக்குப் பின் இயக்குனர் ஹரியுடன் இணைந்த இசையமைப்பாளர்!