Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல ஆண்டுகளுக்குப் பின் இயக்குனர் ஹரியுடன் இணைந்த இசையமைப்பாளர்!

பல ஆண்டுகளுக்குப் பின் இயக்குனர் ஹரியுடன் இணைந்த இசையமைப்பாளர்!
, சனி, 7 ஆகஸ்ட் 2021 (16:11 IST)
இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்தில் ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும்.  இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக  பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர்.

இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கு முன்னதாக இவர்கள் இருவரும் சேவல் படத்தில் 2009 ஆம் ஆண்டு இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெய்லி ஒரு கவர்ச்சி புகைப்படம் வெளியிடும் ஜான்வி கபூர்… இணையத்தில் வைரல்!