தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடங்க உள்ள நிலையில் தனித்து போட்டியிட கட்சியினர் தயாராக இருக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட தொடங்கியுள்ளன. சட்டசபை தேர்தலில் கூட்டணியில் இருந்த திமுக – காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை “உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இல்லையென்றாலும் தனியாக தேர்தலை எதிர்கொள்ள கட்சியினர் தயாராக இருக்க வேண்டும்” என பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.