கேளிக்கை வரி தமிழ் படங்களுக்கு 10 சதவீதமும், மற்ற மொழிப் படங்களுக்கு 20 சதவீதம் என தமிழக அரசு கடந்த செப். 27 ஆம் தேதி அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் திரையரங்குகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரையரங்கு நுழைவுக் கட்டணத்தை முறைப்படுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது, தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் பெரும் இழப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். என்வே கேளிக்கை வரியை முற்றிலும் விலக்கிட வேண்டும். திரையரங்குக் கட்டணத்தை முறைப்படுத்தவேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
இதனை தொடர்ந்து வருகிற வெள்ளிக்கிழமை முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.