தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா டிக்கெட் கட்டணம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபோது சினிமா டிக்கெட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரியும், மாநில அரசு சார்பில் 30% கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள் வேல்லைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் கேளிகை வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி கடந்த 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கேளிக்கை வரி 20% சதவீதம் குறைக்கப்பட்டு 10% விதிக்கப்பட்டுள்ளது. இந்த கேளிக்கை வரி அமலுக்கு பின் சினிமா டிக்கெட் கட்டணத்தின் விலை மேலும் அதிகரிக்கும். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கேளிக்கை வரிக்கு பின் சினிமா டிக்கெட் கட்டணம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்ய உள்ளதாக தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.