தமிழ்ப்படம், காவியத்தலைவன் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ஒய்நாட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் டெஸ்ட் என்ற படத்தில் சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் மாதவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதைக்களம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சில முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஷூட்டிங் முடிந்தும் இன்னும் இந்த படத்தின் ரிலீஸ் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்கின்றனர். சமீபகாலமாக எந்த ஓடிடி நிறுவனமும் திரைப்படங்களை நேரடி ரிலீஸ் செய்யாமல் இருந்த நிலையில் தற்போது டெஸ்ட் திரைப்படம் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளிவருகிறது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.