Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு… விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு… விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

vinoth

, புதன், 8 ஜனவரி 2025 (13:30 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ’Nayanthara Beyond the fairy tale’ ஆவணப்படமாக நெட்பிளிக்ஸில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது ரிலீஸாகியுள்ளது. அதில் தனுஷின் அனுமதியின்றி அவர் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தில் இடம்பெற்ற காட்சிகள் பயன்படுத்தப் பட்டு இருந்தன.

இந்த திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் தாமதமாக இந்த வீடியோ வெளியாக நடிகரும் நானும் ரௌடிதான் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ்தான் காரணம் என நயன்தாரா குற்றம் சாட்டினார். நானும் ரௌடிதான் காட்சிகளைப் பயன்படுத்த அனுமதி கேட்ட நிலையில் 2 ஆண்டுகளாக அதற்கு அனுமதிக்காமல் இழுத்தடித்தார் என்று கூறினார். இந்த சர்ச்சைகளால் கடைசி நேரத்தில் இந்த ஆவணப்படத்தின் மீது ஒரு செயற்கையான எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த ஆவணப்படம் பெரியளவில் ரசிகர்களைக் கவரவில்லை.

இந்நிலையில் அனுமதி இல்லாமல் நானும் ரௌடிதான் படக் காட்சிகளைப் பயன்படுத்தியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 22 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டாக்ஸிக் க்ளிம்ப்ஸ் வீடியோ!