Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் விட்டுக் கொடுத்திருக்கணும்… நயன்தாரா வழக்கு சம்மந்தமாக மன்சூர் அலிகான் கருத்து!

Advertiesment
தனுஷ் விட்டுக் கொடுத்திருக்கணும்… நயன்தாரா வழக்கு சம்மந்தமாக மன்சூர் அலிகான் கருத்து!

vinoth

, ஞாயிறு, 12 ஜனவரி 2025 (10:56 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ’Nayanthara Beyond the fairy tale’ ஆவணப்படமாக நெட்பிளிக்ஸில் இரண்டு ஆண்டுகள் கழித்து ரிலீஸானது. அதில் தனுஷின் அனுமதியின்றி அவர் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இடம்பெற்ற காட்சிகள் பயன்படுத்தப் பட்டு இருந்தன.

இந்நிலையில் அனுமதி இல்லாமல் நானும் ரௌடிதான் படக் காட்சிகளைப் பயன்படுத்தியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 22 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த சர்ச்சை குறித்து சமீபத்தில் பேசியுள்ள மன்சூர் அலிகான் “இந்த விஷயத்தில் தனுஷ் விட்டுக் கொடுத்திருக்கணும். 10 கோடிதானே பரவாயில்லை என்று அந்த காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள சொல்லி இருக்கணும். நயன்தாரா கேரளாவில் இருந்து வந்து சாதித்துள்ளார். அவருக்கு விட்டுக் கொடுப்பதுதானே தமிழனின் பண்பு” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடும்பத்த மொதல்ல பாருங்க… ரசிகர்களுக்காக அஜித் வெளியிட்ட வீடியோ!